வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது பயங்கரமாக மோதியது.
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஜி.எஸ்.டி.சாலை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 34). இவர் நேற்று முன்தினம் மாலை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே சாலையை கடந்தபோது, மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com