

சாயல்குடி,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட வேளாண்மை இணை தலைவர் காஜா முகைதீன், மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நூருல்அமீன், மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மவுலவி மீரான் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.