நாலாச்சோப்ராவில் நைஜீரியரை கொன்றுவிட்டு தப்பிஓடியவர் கைது

நாலாச்சோப்ராவில் நைஜீரியரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாலாச்சோப்ராவில் நைஜீரியரை கொன்றுவிட்டு தப்பிஓடியவர் கைது
Published on

வசாய், 

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா பிரகதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது35). நைஜீரியா நாட்டை சேர்ந்த இவரை கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி நசீர்கான், விக்கி மிஸ்ரா, அஷிஷ், அமித் சிங் ஆகிய 4 பேர் போதைப்பொருள் வாங்கல் தொடர்பாக ஜோசப்பிடம் தகராறு ஏற்பட்டது. இதனால் கத்தியால் நைஜீரியர் ஜோசப்பை சரமாரியாக குத்திவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடிவந்தனர். இதில் நசீர்கான் என்பவர் பெங்களூரூ பகுதியில் அஸ்பாக் சேக் என்ற பெயரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். பின்னர் வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com