திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தந்தை பெரியாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து வாசித்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வித்யா, முரளி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com