ரசிகர்களின் கோரிக்கை ஏற்பு.. நடிகர் விக்ரம் படக்குழு எடுத்த அதிரடி முடிவு..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் 'கோப்ரா'. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களின் கோரிக்கை ஏற்பு.. நடிகர் விக்ரம் படக்குழு எடுத்த அதிரடி முடிவு..
Published on

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோப்ரா' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் திருத்தப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com