அரசு பஸ் மோதி தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

திருவாடானை அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ் மோதி தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
Published on

தொண்டி,

திருவாடானை அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நுங்கு மூடை

திருவாடானை தாலுகா சி.கே.மங்கலம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் மகன் கார்த்திக் (வயது22). இவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் நுங்கு மூடையை வைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கருமொழி போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள் சேதமடைந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.

சிகிச்சை

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்ததுடன் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்டதை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பரபரப்பு

இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் ஸ்ரீபிரியா (வயது 42) திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவரான மண்டபத்தை சேர்ந்த பூவேஸ் பாண்டியன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com