தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

உசிலம்பட்டி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
தனியார் பஸ் மோதி வாலிபர் பலி
Published on

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது35). பால் கறவையாளரான இவர் பண்ணைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது செல்லப்பாண்டி மீது உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com