

கரூர்,
கரூர் மாவட்டம் தும்பிவாடி அருகே உள்ள புரவி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கரூர்-கோவை ரோட்டில் மொச்சகொட்டாம் பாளையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை சேர்ந்த டிரைவர் ராமசாமியிடம் (47) விசாரணை நடத்தி வருகின்றனர்.