பவானிசாகர் அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்

பவானிசாகர் அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானா. நண்பர் படுகாயம் அடைந்தா.
பவானிசாகர் அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
Published on

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள புங்கார் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கவுரி சங்கர் (வயது 19). இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் ரங்கசாமி (19). நண்பர்களான கவுரி சங்கரும், ரங்கசாமியும் நேற்று முன்தினம் இரவு கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கி விட்டு புங்கார் காலனி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். பவானிசாகரை அடுத்த கராச்சிகொரை அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை ரோட்டோரமாக ஒதுக்கி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பாலத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கவுரிசங்கர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ரங்கசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுரிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com