கோபியில் பரிதாபம் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் பலி

கோபியில் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கோபியில் பரிதாபம் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் பலி
Published on

கடத்தூர்

கோபியில் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

விபத்து

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். சக்திவேல் கோபியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு சம்பவத்தன்று ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள வெள்ளாளபாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சாவு

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சக்திவேலுக்கு விஜயா (32) என்ற மனைவி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com