ஓசூரில் விபத்தில்: தனியார் நிறுவன ஊழியர் சாவு - நண்பர் படுகாயம்

ஓசூரில் மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஓசூரில் விபத்தில்: தனியார் நிறுவன ஊழியர் சாவு - நண்பர் படுகாயம்
Published on

ஓசூர்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் சதீஷ் (26). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று இவர்கள் மோட்டார்சைக்கிளில் ஓசூரில் பெங்களூருஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சதீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் விபத்தில் பலியான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com