

காரைக்கால்
காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதின், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் அத்து மீறி நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு முறைப்படி மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் தவறு செய்யும் அரசு அதிகாரியை காப்பாற்றும் முயற்சியாக தான் இதை பார்க்க தோன்றுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.