நடிகரான ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்

47 படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் முருகன், கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டே வில்லன் வேடங்களில் நடித்தும் வருகிறார்.
நடிகரான ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்
Published on

'சார்லி சாப்ளின்', 'அரவான்', 'குடைக்குள் மழை', 'இறைவி', 'என்.ஜி.கே.', 'மாரி', 'சுறா', 'பரமசிவம்' உள்பட 47 படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் முருகன், கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டே வில்லன் வேடங்களில் நடித்தும் வருகிறார்.

'கோச்சடையான்', 'பேச்சுலர்', 'சாணிகாயிதம்', 'இறைவி', 'சத்ரியன்' உள்பட பல படங்களில் விஜய் முருகன் நடித்து இருக்கிறார்.

"இதுவரை ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த படங்களில், 'அரவான்', 'இரவின் நிழல்' ஆகிய 2 படங்களையும் மறக்கவே முடியாது. அரங்குகள் அமைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டவை அந்த 2 படங்களும்தான். 'அரவான்' படம், 350 வருடங்களுக்கு முந்தைய கதை. அதற்கேற்ப அரங்குகள் அமைத்தோம். 'இரவின் நிழல்' படத்துக்கு 102 நாட்கள் ஆனது. 5 ஆயிரம் பேர் பணிபுரிந்தார்கள்" என்கிறார், விஜய் முருகன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com