நடிகர் முகேஷ் விவாகரத்து

தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் முகேஷ், மலையாளத்தில் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
நடிகர் முகேஷ் விவாகரத்து
Published on

இவருக்கும், பிரபல நடிகை சரிதாவுக்கும் 1988-ல் திருமணம் முடிந்து 2011-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். முகேஷ் ஒரு குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார் என்றும் சரிதா குற்றம் சாட்டினார். பின்னர் பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013-ல் முகேஷ் 2-வது திருமணம் செய்து கொண்டார். முகேசுக்கு தற்போது 64 வயது ஆகிறது. இந்த நிலையில் முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் தற்போது முறிவு ஏற்பட்டு உள்ளது. விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து மெத்தில் தேவிகா கூறும்போது, முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது. எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com