நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா படத்தின் டைட்டில் வெளியானது

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘என்பிகே 107’. இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா படத்தின் டைட்டில் வெளியானது
Published on

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 'என்பிகே 107' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இதன் டைட்டில் போஸ்டரையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com