நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா- விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா- விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில், விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சவுந்தர்யா தமது ட்விட்டர் பக்கத்தில், இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com