சரத்குமார், விதார்த் இணைந்து நடிக்கும் படம்

சரத்குமார், விதார்த் இணைந்து நடிக்கும் படம்
Published on

சரத்குமார், விதார்த் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் நந்தா வில்லனாக வருகிறார். சிங்கம்புலி, சித்திக், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு `சமரன்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை திருமலை பாலுச்சாமி டைரக்டு செய்கிறார்.

ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சுற்றி நடக்கும் கதை. சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை, எதிர்த்துப் போராடுவது போன்ற கதையம்சத்தில் அதிரடி சஸ்பென்ஸ் படமாக உருவாகிறது.

சென்னை மணலி, மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ரோஷ்குமார் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: குமார் ஶ்ரீதர், இசை: வேத் சங்கர் சுகவனம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com