மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் சிவக்குமார்...

உழவர் பவுண்டேஷன் விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவக்குமார் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.
மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் சிவக்குமார்...
Published on

நடிகர் கார்த்தி நடத்திவரும் உழவன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் உழவர் பவுண்டேஷன் சார்பில் 'உழவர் விருது 2022' நேற்று நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடந்த இந்த விழாவில் உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

இந்த விழாவில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவர் பேசியதாவது, உழவர் பவுண்டேஷன் தொடங்கிய கார்த்தியும் ஏழை பெண் விவசாயியின் பேரன்தான். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது 10 மாதத்தில் என் அப்பா இறந்து விட்டார். என் அப்பா மரணத்திற்கு பிறகு என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும், எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார், அதனால் தான் இப்போது உங்கள் முன்னால் நான் நிற்கிறேன். என் அம்மா எனக்கு தலை வாரிவிட்டதில்லை, உணவு ஊட்டிவிட்டதில்லை. தனி ஆளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார். விவசாயத்தில் அதிகமான வேலைகளை பெண்கள் தான் செய்கின்றனர். நாம் சிலையை தான் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்க்கவில்லை. பெண்கள் தான் கடவுள் என்று நெகிழ்ந்து பேசியபோதே கண்கலங்கி அழுதார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com