அம்மாவை நினைத்து உருகும் உதயா

சமீபத்தில் காலமான தனது தாயார் குறித்து நடிகர் உதயா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அம்மாவை நினைத்து உருகும் உதயா
Published on

நடிகர் உதயா மற்றும் டைரக்டர் விஜய் ஆகியோரின் தாயாரும், மூத்த தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை, சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவரது மறைவு குறித்து மூத்த மகன் நடிகர் உதயா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

"அம்மா என்றாலே தெய்வத்துக்கு சமமானவர்தான். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டபோது, நான் முதலில் சொன்னது அம்மாவிடம்தான். அம்மாதான் அப்பாவை சம்மதிக்க வைத்தார். எனக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், ஊக்கமாகவும் இருந்தவர் அம்மாதான். நானும், தம்பி விஜய்யும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அதன்படியே 'தலைவா' படத்தில் நடித்தேன்.

உடலால் அம்மா எங்களுடன் இல்லையென்றாலும், உணர்வால் அவர் எங்களுடன் வாழ்கிறார்.. அவரது 'வாய்ஸ் மெசேஜ்களை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார், நடிகர் உதயா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com