தனுஷ் ஐஸ்வர்யா குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து

இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தனர் இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
தனுஷ் ஐஸ்வர்யா குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து
Published on

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று ரசிகர்களும் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனிடம், அம்மா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வைங்க எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்வதற்கு முன்பு ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டாமல் அல்லது வேறொருவருடன் காதல் கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்கள் மரியாதையுடன் விலகிச் செல்கிறார்கள், தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள் என்றார்.

இவரின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com