நடிகை சம்யுக்தா புகாருக்கு டி.வி. நடிகர் விஷ்ணு காந்த் விளக்கம்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை சம்யுக்தாவும் நடிகர் விஷ்ணு காந்தும் காதலித்து திருமணம் செய்து சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நடிகை சம்யுக்தா புகாருக்கு டி.வி. நடிகர் விஷ்ணு காந்த் விளக்கம்
Published on

விஷணுகாந்த் மாத்திரை போட்டு தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்தாகவும் ஆபாச படங்களை பார்த்து அதுமாதிரி நடந்து கொள்ள சொன்னதாகவும் படுக்கை அறையில் கேமரா வைக்கலாம் என்று கூறியதாகவும் சம்யுக்தா குற்றம் சாட்டினார். இது பரபரப்பானது.

இதற்கு இன்ஸ்டாகிராம் நேரலையில் விஷ்ணு காந்த் விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறும்போது, ''இந்த பிரச்சினையை குடும்பத்திற்குள்ளே பேசி முடிக்க நினைத்தேன். அவர்கள் என்மீது போலீசில் புகார் அளித்து கொடூரமானவனாக சித்தரிக்கின்றனர். சம்யுக்தா திருமணமாகி கொஞ்ச நாட்களிலேயே அவரது வீட்டுக்குபோய் விட்டார். இந்த திருமணத்தை ஒரு சீரியல் கல்யாணம்போல நினைத்து மக்களிடம் இருந்து மறைத்து விட எண்ணினார். நான் வெளியே சொன்னதால் என்னை முடக்க பயங்கர திட்டம் வகுத்து செயல்படுத்தி உள்ளனர். இன்னொருவருடன் காதலில் இருந்ததாக நான் வெளியிட்ட ஆடியோவுக்கு விளக்கம் தரவில்லை.

அவர் பக்காவாக என்னை ஏமாற்றி இருக்கிறார். நான் படுக்கை அறையில் கேமரா வைக்க வேண்டும் என்று சொன்னதாக சொல்லி உள்ளனர். அதை கேட்கும்போது என் உடம்பு கூசியது. அவர் சொன்ன அனைத்தும் பொய். மாத்திரை போட்டுக்கொண்டு செக்ஸ் வைத்ததாக சொல்லி உள்ளனர். அதற்கான உடல் பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன்.'' என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com