நடிகை சனம் ஷெட்டி கோபம்

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான சனம் ஷெட்டி கட்சியில் இருந்து விலகிய மூவரையும் கடுமையாக சாடி உள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி கோபம்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காமல் தோல்வி அடைந்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மகேந்திரன், சந்தோஷ் பாபு, பத்ம பிரியா ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர்.

இது மக்கள் நிதி மய்யம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான சனம் ஷெட்டி கட்சியில் இருந்து விலகிய மூவரையும் கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கோபமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் விசுவாசம் எங்கே இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் எனது கேள்வி என்னவென்றால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் கட்சியில் இருந்து விலகி இருப்பீர்களா? நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததன் மூலம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com