நடிகைகள் டப்பிங், புரமோஷனுக்கு வரமாட்டாங்க... எஸ்.ஏ.சந்திரசேகர்

நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகைகள் டப்பிங், புரமோஷனுக்கு வர மாட்டாங்க என்று கூறி இருக்கிறார்.
நடிகைகள் டப்பிங், புரமோஷனுக்கு வரமாட்டாங்க... எஸ்.ஏ.சந்திரசேகர்
Published on

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, விஜய் ஆண்டனியை நான் அழைத்தவுடன் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். சமுத்திரகனியை தமிழ்நாட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. ஐதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சிறப்பான வளர்ச்சி.

பொதுவாக நடிகைகள் நடிக்கரதோடு சரி, டப்பிங் பேச வர மாட்டாங்க, புரமோஷனுக்கு வர மாட்டாங்க... ஆனா எனக்கு இந்த படத்தில் நடித்த இனியா, சாக்ஷி அகர்வால் என இரண்டு நடிகைகள், நடித்து முடித்து, டப்பிங் பேசி, பட விழாவிற்கும் வந்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com