மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ள படத்துக்கு போட்டியாக, அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் ரொமாண்டிக் படம் ரிலீசாக உள்ளது.
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா
Published on

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள தள்ளிப்போகாதே திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படம் டிசம்பர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்.கண்ணன் இயக்கி உள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com