சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவி சேர்ப்பு

எம்.எல்.ஏ.க்களின் தகுதி இழப்பை தடுக்கும் சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவியும் சேர்க்கப்பட்டதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவி சேர்ப்பு
Published on

புதுச்சேரி

எம்.எல்.ஏ.க்களின் தகுதி இழப்பை தடுக்கும் சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவியும் சேர்க்கப்பட்டதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆதாய பதவிகள்

புதுவையில் வாரியங்கள், கழகங்கள் என 32 அரசு சார்பு நிறுவனங்களில் வாரிய தலைவர்கள் நியமிக்கப்படலாம். இவை ஆதாயம் தரும் பதவிகள் ஆகும். அதாவது இந்த பதவி வகிப்பவர்களுக்கு சம்பளம், அலவன்சுகள் உண்டு.

இந்த பதவிகளில் நியமிக்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழக்கமாக அதற்கான சம்பளம் மற்றும் சலுகைகளுடன் வாரிய தலைவர் பதவிக்கான சலுகைகளும் கிடைக்கும். அரசின் பதவியில் இருப்போர் இருவேறு ஆதாய பதவிகள் வகித்தால் தகுதி இழக்க வேண்டியது வரும்.

சட்ட திருத்தம்

இதை தடுக்கும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு வாரியம், கழகங்களில் தலைவர் பதவி வகிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழக்காத வண்ணம் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படியே கடந்த காலங்களில் வாரியங்கள், கழகங்களில் தலைவர்களாக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

அதேவேளையில் புதுவை ஒன்றிய ஆட்சிபரப்பு விலங்கு நல வாரியமானது இந்த சட்ட திருத்தத்தில் இடம்பெறாமல் இருந்து வந்தது. எனவே அதையும் சேர்க்க நேற்று சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com