ரிலீஸுக்கு முன்பே பல கோடி வியாபாரமான ஆதிபுருஷ் திரைப்படம்

நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் வருகிற ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரிலீஸுக்கு முன்பே பல கோடி வியாபாரமான ஆதிபுருஷ் திரைப்படம்
Published on

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை கைப்பற்றியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com