இளநிலை எழுத்தர் பணி தேர்வுக்கு அனுமதி சீட்டு

இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வு 137 மையங்களில் நடக்கிறது. அதற்கான அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை எழுத்தர் பணி தேர்வுக்கு அனுமதி சீட்டு
Published on

புதுச்சேரி

இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வு 137 மையங்களில் நடக்கிறது. அதற்கான அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை எழுத்தர்

புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள 155 இளநிலை எழுத்தர் பணியிடங்கள், 55 பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்ப பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து இதில் பங்கேற்று தேர்வு எழுத விரும்பி சுமார் 46 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

137 மையங்கள்

புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இளநிலை எழுத்தர், பண்டக காப்பாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் புதுவையில் 107 மையங்களிலும், காரைக்காலில் 14 தேர்வு மையங்களிலும், மாகியில் 6 மையங்களிலும், ஏனாமில் 10 மையங்களிலும் (ஒட்டுமொத்தமாக 137 மையங்கள்) தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் விவரம், உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com