

உலகின் குடும்பத்தோடு பயணிகளுக்கு மிகவும் நட்பான சூழலைக் கொண்டிருக்கும் (Family-Friendly) சுற்றுலா நகரங்களில் ஒன்றாகத் திகழும் துபாய், ஒவ்வொரு ஆண்டும் புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்தி குடும்பங்களின் பயணத்தை இன்னும் சிறப்பாக்கி வருகிறது. குழந்தைகளுக்கான அதிநவீன விளையாட்டு மையங்கள், அனைவரையும் கவரும் இன்டராக்டிவ் அருங்காட்சியகங்கள், உலகத் தரத்திலான கடற்கரை ரிசார்ட்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற அனுபவங்களை துபாய் வழங்குகிறது.
நீங்கள் சிறிய குழந்தைகளுடன் பயணம் செய்தாலும், பள்ளி மாணவர்களோ அல்லது டீனேஜ் வயது பிள்ளைகளோ உடன் சென்றாலும், இந்த புதிய இடங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கும்.
துபாயின் புதிய குடும்ப பொழுதுபோக்கு மையங்களில் முக்கியமானதாக திகழ்கிறது Bluewaters Island-ல் அமைந்துள்ள Ribambelle. சாதாரண உணவகங்களைப் போல இல்லாமல், பெற்றோர்களும் குழந்தைகளும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் சிறப்பம்சம், பயிற்சி பெற்ற பணியாளர்களின் கண்காணிப்பில் இயங்கும் பாதுகாப்பான குழந்தைகள் விளையாட்டு பகுதி. பெற்றோர் அமைதியாக உணவை ரசிக்கும்போது, குழந்தைகள் கலைப் பயிற்சிகள், கைவினைப் பணிகள், சமையல் வகுப்புகள், சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் கற்பனை உலக அனுபவங்களில் ஈடுபட முடியும்.
இங்குள்ள உணவு பட்டியலும் குடும்பங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுகளுடன், பெரியவர்களுக்கான சர்வதேச உணவு வகைகளும் கிடைக்கின்றன. பிறந்தநாள் விழாக்கள், வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழும் மதிய உணவு அல்லது சுற்றுலா முடிந்த பின் ஓய்வெடுக்க சிறந்த இடமாக இது திகழ்கிறது.
யாருக்கு ஏற்றது?
சிறிய குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள்
அமைதியான சூழலில் உணவருந்த விரும்பும் பெற்றோர்
பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்கள்
கூடுதல் விவரங்களுக்கு - https://ribambelle.ae/
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் துபாய் செல்லும் குடும்பங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் Boo Boo Land. கல்வி, பொழுதுபோக்கு மற்றும் உடல் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் இந்த உள்புற விளையாட்டு மையம், குழந்தைகளின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு கருப்பொருள் அடிப்படையிலான விளையாட்டு பகுதிகள், ஏறும் அமைப்புகள், சென்சரி விளையாட்டுகள், மென்மையான விளையாட்டு மையங்கள், தடைகள் நிறைந்த சாகசப் பகுதிகள் மற்றும் கற்றலுடன் கூடிய செயல்பாடுகள் உள்ளன.
சிறிய குழந்தைகளுக்கென தனி விளையாட்டுப் பகுதி அமைக்கப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் கவலையின்றி குழந்தைகளை விளையாட அனுமதிக்கலாம். துபாயின் வெப்பமான காலநிலையிலும் ஆண்டு முழுவதும் குடும்பங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட சிறந்த உள்புற இடமாக இது விளங்குகிறது.
முக்கிய அம்சங்கள்
பல அடுக்குகளைக் கொண்ட உள்புற விளையாட்டு மையம்
கல்வி சார்ந்த செயல்பாட்டு பகுதிகள்
குட்டீஸ்களுக்கான தனிப்பிரிவு
இன்டராக்டிவ் கற்றல் அனுபவங்கள்
குடும்பத்தினருக்கான கஃபே மற்றும் ஓய்வு பகுதி
இப்போதே விசிட் அடிங்க - https://www.booboolaand.com/
குழந்தைகளுடன் வெளியில் உணவருந்துவது பல நேரங்களில் சவாலாக இருக்கும். ஆனால் குடும்பங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள SOCO, அந்த அனுபவத்தை மிகவும் எளிதாக்குகிறது.
விரிவான உட்புற அமைப்பு, அழகான அலங்காரம் மற்றும் குழந்தைகளுக்கென ஒதுக்கப்பட்ட பொழுதுபோக்கு பகுதிகள் ஆகியவை குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட உதவுகின்றன.
பெற்றோர் அமைதியாக உணவை ரசிக்கும் நேரத்தில், குழந்தைகள் அவர்களுக்கென அமைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம்.
சிறிய குடும்பச் சந்திப்புகள் முதல் பெரிய குடும்ப கொண்டாட்டங்கள் வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் SOCO ஒரு சிறந்த தேர்வாகும்.
SOCO-வைப் பற்றி தெரிந்துகொள்ள - https://www.visitdubai.com/en/places-to-visit/soco
சிறிய குழந்தைகள் மட்டுமல்லாமல், டீனேஜ் வயதினருக்கும் உற்சாகமான அனுபவங்களை வழங்கும் இடங்களைத் தேடும் குடும்பங்களுக்கு No Grip DXB ஒரு சிறந்த தேர்வாகும். வழக்கமான தீம் பார்க்குகளை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் இந்த சாகச மையம், உடல் திறன், சமநிலை, வேகம் மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சோதிக்கும் பல்வேறு சவால்களால் நிரம்பியுள்ளது.
பல்வேறு தடைகள், ஏறும் அமைப்புகள், சமநிலைப் பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் சாகச விளையாட்டுகள் மூலம் குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாக கலந்து கொள்ளலாம். இது குழந்தைகள் மட்டுமின்றி முழு குடும்பமும் இணைந்து அனுபவிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு மையமாகும்.
ஒவ்வொரு செயல்பாடும் தன்னம்பிக்கை, பிரச்சினைகளை தீர்க்கும் திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரநிலைகள், அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மற்றும் நவீன வசதிகள் இருப்பதால் குடும்பத்தினர் நிம்மதியாக சாகச அனுபவத்தை ரசிக்கலாம்.
யாருக்கு ஏற்றது?
டீனேஜ் குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள்
சாகசத்தை விரும்புபவர்கள்
உடல் இயக்கம் நிறைந்த பொழுதுபோக்கை விரும்பும் குழந்தைகள்
குடும்பத்துடன் இணைந்து விளையாட விரும்புபவர்கள்
மேலும் பார்க்க - https://www.visitdubai.com/en/places-to-visit/nogrip-dxb
Museum of Candy என்பது ஒரு சாதாரண அருங்காட்சியகம் அல்ல. இனிப்புகள் மற்றும் சாக்லேட் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அனுபவ மையம், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் குழந்தைகளாக மாற்றும் வண்ணமயமான உலகமாக திகழ்கிறது.
பெரிய அளவிலான மிட்டாய் வடிவ அலங்காரங்கள், பல்வேறு கருப்பொருள் அறைகள், வண்ணமயமான நடைபாதைகள் மற்றும் இன்டராக்டிவ் காட்சிகள் என ஒவ்வொரு பகுதியும் புகைப்படம் எடுக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிர அழகான குடும்ப புகைப்படங்களை எடுக்க இது மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.
குழந்தைகள் விளையாடி மகிழும் போது, பெற்றோர்களும் அந்த அனுபவத்தில் இணைந்து மறக்க முடியாத குடும்ப நினைவுகளை உருவாக்கலாம். துபாயின் வெப்பமான காலநிலையிலும் ஆண்டு முழுவதும் குடும்பங்கள் செல்ல ஏற்ற சிறந்த உள்புற சுற்றுலா தலமாக இது விளங்குகிறது.
ஏன் குடும்பங்கள் விரும்புகிறார்கள்?
இன்டராக்டிவ் காட்சிகள்
வண்ணமயமான புகைப்பட இடங்கள்
இனிப்புகளை மையமாகக் கொண்ட கருப்பொருள் அறைகள்
அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு
ஆண்டு முழுவதும் பார்வையிட ஏற்ற உள்புற சுற்றுலா தலம்
கூடுதல் விவரங்களுக்கு - https://themuseumofcandy.com/
சுற்றுலாவுடன் ஓய்வையும் இணைக்க விரும்பும் குடும்பங்களுக்கு The Westin Dubai Mina Seyahi Beach Resort & Marina சிறந்த தேர்வாகும். அரபிக் கடலை ஒட்டிய தனியார் கடற்கரையில் அமைந்துள்ள இந்த சொகுசு ரிசார்ட், குடும்பங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
விரிவான குடும்ப அறைகள், பல நீச்சல் குளங்கள், குழந்தைகளுக்கான தனி நீச்சல் குளங்கள், Kids Club, நீர்விளையாட்டுகள் மற்றும் நேரடி கடற்கரை அணுகல் போன்ற வசதிகள் குடும்ப விடுமுறையை முழுமையாக்குகின்றன.
பெற்றோர்கள் ஸ்பா, கடற்கரை உணவகங்கள் மற்றும் ஓய்வு வசதிகளை அனுபவிக்கும் நேரத்தில், குழந்தைகள் மேற்பார்வையுடன் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளில் கலந்து கொள்ளலாம்.
மேலும் துபாய் மரினா, பாம் ஜுமைரா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் எளிதில் செல்லக்கூடிய இடத்தில் இந்த ரிசார்ட் அமைந்துள்ளது.
குடும்பங்களுக்கான முக்கிய வசதிகள்
தனியார் கடற்கரை
Kids Club
பல நீச்சல் குளங்கள்
நீர்விளையாட்டுகள்
குடும்ப உணவகங்கள்
விசாலமான தங்கும் வசதி
The Westin Dubai Mina Seyahi Beach Resort & Marina பற்றிய மேலும் தகவல்களுக்கு, https://www.marriott.com/en-us/hotels/dxbmb-the-westin-dubai-mina-seyahi-beach-resort-and-marina/overview/
துபாயின் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சற்று விலகி அமைதியான சூழலில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புபவர்களுக்கு Park Hyatt Dubai ஒரு சிறந்த தேர்வாகும்.
துபாய் க்ரீக் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ரிசார்ட், பசுமை நிறைந்த தோட்டங்கள், அமைதியான நீர்நிலைகள் மற்றும் உலகத் தரத்திலான தங்கும் வசதிகளை வழங்குகிறது.
விரிவான குடும்ப அறைகள், நீச்சல் குளங்கள், சிறந்த உணவகங்கள் மற்றும் குழந்தைகளுடன் அமைதியாக நேரத்தை செலவிட ஏற்ற சூழல் ஆகியவை இந்த ரிசார்ட்டின் சிறப்பம்சங்களாகும்.
இங்கிருந்து ஓல்ட் துபாய், துபாய் க்ரீக், முக்கிய ஷாப்பிங் மையங்கள் மற்றும் கலாசார தளங்களை எளிதாகச் சுற்றிப் பார்க்க முடியும். நகரத்தின் பரபரப்பையும், அமைதியான ரிசார்ட் அனுபவத்தையும் ஒரே பயணத்தில் அனுபவிக்க விரும்பும் குடும்பங்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும்.
சிறப்பம்சங்கள்
அழகிய துபாய் க்ரீக் அமைவிடம்
குடும்பங்களுக்கு ஏற்ற சொகுசு தங்கும் வசதி
நீச்சல் குளங்கள்
நீர்நிலை காட்சியுடன் கூடிய உணவகங்கள்
பசுமையான தோட்டங்கள்
முக்கிய சுற்றுலா தலங்களுக்கு எளிய அணுகல்
Park Hyatt Dubai பற்றிய மேலும் தகவல்களுக்கு - https://www.hyatt.com/park-hyatt/en-US/dxbph-park-hyatt-dubai
ஷாப்பிங் மால்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மட்டுமல்ல, குடும்பங்களை மையமாகக் கொண்ட புதிய அனுபவங்களின் நகரமாகவும் துபாய் வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவுபடுத்தும் விளையாட்டு மையங்கள், குடும்பத்துடன் சாகச அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் இடங்கள், அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக உணவருந்தும் உணவகங்கள் மற்றும் உலகத் தரத்திலான ரிசார்ட்கள் என துபாய் இன்று முழுமையான குடும்ப சுற்றுலா நகரமாக திகழ்கிறது.
உங்கள் அடுத்த வெளிநாட்டு குடும்ப சுற்றுலாவை திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், இந்த ஏழு புதிய அனுபவங்களையும் உங்கள் பயணப் பட்டியலில் சேர்க்க மறக்காதீர்கள். பொழுதுபோக்கு, சாகசம், ஓய்வு மற்றும் குடும்பத்துடன் தரமான நேரம் ஆகிய அனைத்தையும் ஒரே பயணத்தில் அனுபவித்து, வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் இனிய தருணங்களை துபாய் உங்களுக்கு பரிசளிக்கும்.