எஸ். ஏ. கல்லூரியில் 'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்' நூல் வெளியீட்டு விழா

தமிழ் இலக்கியத்தின் பண்பாட்டு மரபுகள், தமிழின் தொன்மை, வாசிப்பு பழக்கம் மற்றும் இலக்கியச் சிறப்பை எடுத்துரைத்த சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா.
தமிழ் பண்பாட்டு மரபுகளைப் போற்றிய நூல் வெளியீட்டு விழா
Published on

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, அகத் தர மதிப்பீட்டுக் குழு ஆகியவை இணைந்து நடத்திய தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள் நூல் வெளியீட்டு விழா ஜூலை 27, 2026 அன்று கல்லூரிக் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஸ்டாலின் சத்தியா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக முகை மழலையர் பள்ளி மற்றும் அகாடமியின் இயக்குநர் திருமதி அனுகிரகா ஆதிபகவன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் பண்பாட்டு மரபுகளைப் போற்றிய நூல் வெளியீட்டு விழா

கல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய திரு. ப‌. வெங்கடேஷ் ராஜா அவர்கள் முதல் பிரதியை வெளியிட்டுத் தலைமையுரை வழங்கினார்கள்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் சொ. அன்பழகன் அவர்கள் நூல்கள் வாசிப்பு குறித்து பேசியதோடு , தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள் நூல் குறித்த நோக்கவுரை ஆற்றினார்கள்

இதில் இயக்குநர்கள் இருவரும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி தமிழின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துரைத்தது. இதில் சிறப்பு விருந்தினர் தமிழரின் நாகரிகத்தில் தொடங்கி தற்காலத்தில் அனைவரும் புத்தக வாசிப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.

நூலாசிரியர் முனைவர் பா. விக்னேஷ் குமார் அவர்கள் தொகுத்த 'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்' என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் செய்திகளைக் கூறி நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com