கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2025 கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஐ.ஏ.எஸ் தொடங்கி வைத்தார்!
சரவணம்பட்டி, ஏப்.19-
கட்டிடக்கலை, கட்டுமானம், பொறியியல், நவீன கட்டுமான பொருட்கள், கட்டுமானத் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்த பில்டு இன்டெக் 2025 கண்காட்சி
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் இன்று தொடங்கியது. தொடர்ந்து 21ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு கண்காட்சியின் தலைவர் ஞானவள்ளல் தலைமை தாங்கினார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கொடிசியா செயலாளர் யுவராஜ், கண்காட்சி துணைத் தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சி 1 லட்சம் சதுர அடியில் 250 கண்காட்சியாளர்களின் 350 க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்டுமான பொருட்கள், கட்டுமான வேதிப் பொருட்கள், கட்டுமான இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், செங்கல் தயாரிக்கும் இயந்திரங்கள், பயோ செப்டிக் டேங்க் மற்றும் தண்ணீர் டேங்க், கதவுகள் மற்றும் ஜன்னல்கள், அலங்கார விளக்குகள், எலக்ட்ரிக் வயர் மற்றும் கேபிள்கள், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள், பர்னிச்சர் மற்றும் தரை விரிப்புகள், லேமினேட் மற்றும் பிளைவுட்கள், சுவர் பூச்சு மற்றும் பெயிண்டுகள், பேவர் பிளாக்ஸ், மோட்டார், பம்ப், பைப் மற்றும் பிட்டிங்குகள், ப்ரீ காஸ்ட் கட்டிடங்கள், ரெடிமிக்ஸ் கான்கிரீட், ஆர்ஓ மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தீ தடுப்பு சாதனங்கள், மென்பொருள் தீர்வுகள், ஸ்டீல் மற்றும் கான்கிரீட், நீச்சல் குளம், டைல்ஸ், கிரானைட் மற்றும் மார்பில் கற்கள், நீரியல் தொழில்நுட்பங்கள், திரைச் சீலைகள் மற்றும் துணி வகைகள், வீடு மற்றும் அலுவலக தானியங்கி சாதனங்கள், மரம், வெனீர் மற்றும் தரைத்தளம், கூரை சார்ந்த பொருட்கள், குளிரூட்டும் சாதனங்கள், இன்டீரியல் இன்டீரியர் மற்றும் ஃபர்னிஷிங்ஸ், சமையலறை கேபினட் சாதனங்கள் மற்றும் கட்டுமானம் சார்ந்த காட்சி பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த கண்காட்சியில் பில்டர்கள், ப்ரமோட்டர்கள், டெவலப்பர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி ஆகிய 8 மாநிலங்களிலிருந்தும் கட்டுமான துறை சார்ந்த வல்லுநர்கள், தொழில்நுட்பத்தினர், கட்டுமானத்துறையினர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக போர்டபிள் கண்டெய்னர்கள், பைபர் கிளாஸ் பிரீ பார், பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க், தானியங்கி மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் சென்டரிங் பேனல்கள், பிஓடி வீடுகள் மற்றும் டைனி வீடுகள், மறுசுழற்சி பிளாஸ்டிக் தாள்கள், ஸ்மார்ட் டாய்லெட்டுகள், கனரக கட்டுமான இயந்திரங்கள் இடம்பெறுகின்றன. மேலும் வடிவமைப்பாளர்கள், ஆலோசனை பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், கட்டுமான துறை முதலீட்டாளர்கள், மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை ஆலோசகர்கள், திட்ட மேலாளர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட 40000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.