

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முதலீடு மட்டுமல்ல; தெளிவான கனவு, விடாமுயற்சி, தரத்தின் மீதான அக்கறை ஆகியவையும் அவசியம். இந்த அணுகுமுறையை மையமாகக்கொண்டு ஆண்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆடைத்துறையில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார் மிசாஜ் (Mizaj) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் ரஃபி.
எளிய தொடக்கத்திலிருந்து வளர்ச்சியை நோக்கிப் பயணித்த அவரது தொழில்முனைவு முயற்சி, திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான ஆண்கள் ஆடைகளில் கவனம் செலுத்தும் ஒரு பிராண்டாக உருவெடுத்துள்ளது. ஆயத்த ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதைக் கடந்து, ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் உடலமைப்பிற்கும் ஏற்ற ஆடையை வடிவமைக்க வேண்டும் என்பதே மிசாஜின் அடிப்படை அணுகுமுறை.
துணி, நிறம், வடிவமைப்பு, தையல், இறுதி நேர்த்தி என ஒவ்வொரு கட்டத்திலும் கவனம் செலுத்துவது இந்த நிறுவனத்தின் பணிமுறையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, முதல் முறையிலேயே சரியான பொருத்தத்தை வழங்க வேண்டும்என்ற ‘First-Time-Right’ நோக்கத்துடன் அளவெடுப்பு மற்றும் தையல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாரம்பரிய தையல் நுணுக்கங்களுடன் புதிய தொழில்நுட்பங்களையும் இணைக்கும் முயற்சியாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆடை ஆலோசனை, தனிப்பட்ட ஸ்டைலிங் வழிகாட்டுதல், காணொலி அழைப்பு வழியான ஷாப்பிங் போன்ற சேவைகளையும் மிசாஜ் முன்னிறுத்துகிறது. திருமண சூட்கள், டக்ஸீடோக்கள், ஷெர்வானிகள், பந்த்கலாக்கள் மற்றும் இந்தோ வெஸ்டர்ன் ஆடைகள் எனப் பல்வேறு தேர்வுகளை வழங்குகிறது.
நிறுவனம் வழங்கிய தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிசாஜ் 11 ஷோரூம்களாக வளர்ந்து, 50,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியுள்ளது. அதன் அடுத்தகட்ட விரிவாக்கமாக சென்னை அண்ணா நகரில் 12-வது கிளை, 2026 நவம்பர் 14 அன்று திறக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் அனுபவம், குழு ஒருங்கிணைப்பு, உற்பத்தித்திறன், வடிவமைப்புத் தரம் ஆகியவற்றை ஒரே அளவில் முக்கியமாகக் கருதும் இந்தப்பயணம், ஒரு ஆ டை பிராண்டின் வளர்ச்சியை மட்டுமல்ல; ஒரு தொழில் முனைவோரின் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது. புதிய சந்தைகளில் விரிவடைந்து, தனிப்பயனாக்கப்பட்ட ஆண்கள் ஆடைத் துறையில் தனது இருப்பை வலுப்படுத்துவதே மிசாஜின் அடுத்த இலக்காக உள்ளது.
திருமணத் தயாரிப்பில் மணமகளின் ஆடைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இன்று மணமகன்களின் ஆடைத்தேர்விலும் பிரதிபலிக்கிறது. வழக்கமான ஆயத்த ஆடைகளைத்தாண்டி, தங்களது ஆளுமை, நிகழ்வின் தன்மை, விருப்பமான நிறங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு ஏற்ப ஆடைகளைத் தேர்வு செய்யும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றத்துக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆண்கள் திருமண ஆடைகளில் கவனம் செலுத்துகிறது மிசாஜ் இன்டர்நேஷனல் பிரைவேட்லிமிடெட்.
“Mizaj and You Made for Each Other!” என்ற கருத்தை முன்வைக்கும் மிசாஜ், ஒவ்வொரு மணமகனுக்கும் அவருக்கே உரிய தோற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது. துணி, நிறம், பேட்டர்ன், வடிவமைப்பு, அளவு, அலங்கார வேலைப்பாடு எனப்பல அம்சங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
கஸ்டமைஸ்டு திருமண சூட்கள் மிசாஜின் முக்கிய சிறப்பம்சமாகும். அதனுடன் டக்ஸீடோக்கள், வரவேற்பு நிகழ்ச்சி சூட்கள், டிசைனர்பிளேசர்கள், பந்த்கலாக்கள், ஷெர்வானிகள், இந்தோ– வெஸ்டர்ன் ஆடைகள் ஆகியவையும்இடம்பெறுகின்றன. பாரம்பரிய இ ந்திய உடை அழகையும் சமகால ஃபேஷனையும் இணைத்து, திருமணத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கான ஆடைத்தேர்வுகளை வழங்குவதே இதன் நோக்கம்.
ஆடை அழகாக இருப்பதுடன் அணிபவருக்குக் கச்சிதமாகப் பொருந்துவதும் முக்கியம். தோள்பட்டை அமைப்பு, ஜாக்கெட்டின் வடிவம், உடலமைப்புக்கு ஏற்ற அளவு, இறுதி நேர்த்தி போன்ற நுணுக்கங்களில் கவனம் செலுத்தும் ‘First-Time-Right’ பொருத்தக் கொள்கையை நிறுவனம் வலியுறுத்துகிறது. மேலும், ஆரி எம்பிராய்டரி, மணி வேலைப்பாடு உள்ளிட்ட அலங்காரத் தேர்வுகளும் உள்ளன. நிறுவனத் தகவலின்படி 30-க்கும் மேற்பட்ட ஆரி வேலைப்பாட்டு வடிவமைப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆடைகளைத் தனித்தனியாகத் தேர்ந்தெடுப்பதைவிட, நிறங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஒன்றோடொன்று பொருந்தும் வகையில் முழுமையான திருமண ஸ்டைலிங் ஆலோசனையையும் மிசாஜ் வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தனிப்பட்ட ஃபேஷன் ஆலோசனை மற்றும் காணொலி அழைப்பின் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி போன்ற முயற்சிகள், பாரம்பரிய தையல் சேவையை நவீன அனுபவத்துடன் இணைக்கின்றன.
2011 முதல் தையல் துறையில் அனுபவம் கொண்டுள்ளதாகக் கூறும் மிசாஜ், 100-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள், 1,000-க்கும் மேற்பட்ட கலெக்ஷன்கள், 100-க்கும் மேற்பட்ட ஸ்டைல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. மேலும், 50,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கியுள்ளதாகவும், ஷோரூம்கள் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட கூகுள் மதிப்புரைகளுடன் சுமார் 4.9 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.
எண் 267, முதல்தளம், 5-வது அவென்யூ, Z பிளாக்,
அண்ணா நகர் டவர் மெட்ரோ நிலையம் அருகில்,
சென்னை.
திருமண ஆடை என்பது ஒரு நாள் அணியும் உடை மட்டுமல்ல; முக்கியமான நினைவுகளின் ஒரு பகுதி. அந்த நினைவுக்கு ஏற்ற தனித்துவம், பொருத்தம், கைவினை நேர்த்தி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆண்களின் திருமண ஃபேஷனில் தனது இடத்தை வலுப்படுத்த முயல்கிறது மிசாஜ்.