நிறுவனங்களில் செலவு குறைப்பை எவ்வாறு மேற்கொள்வது? அமெரிக்க வாழ் தமிழர் மனோசேகர் சிறப்பு பேட்டி


நிறுவனங்களில் செலவு குறைப்பை எவ்வாறு மேற்கொள்வது? அமெரிக்க வாழ் தமிழர் மனோசேகர் சிறப்பு பேட்டி
x

வணிக உலகம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இதில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் திறன் மிக முக்கியமானது. இன்று நிறுவனங்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றன.

"பொருளாதார நிச்சய மற்ற நிலைகள் முதல் உலகளாவிய இடையூறுகள் வரை சவால்களை எதிர்கொள்கின்றன.

இந்தச் சூழலில் பயனுள்ள செலவு குறைப்பு உத்திகள் என்பது செலவுகளை குறைப்பது மட்டுமல்ல வளங்களை மேம்படுத்துவதும் நிலையான செயல்பாட்டு திறனை உறுதி செய்வதும் ஆகும்.

அமெரிக்காவில் இன்று பல பெரிய நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்தி சென்ற அனுபவமிக்க நிபுணரான மனோசேகரை நேர்காணல் செய்தோம்.

செலவு குறைப்பு திட்டங்களை எப்படி செய்வது என்பது குறித்தான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- எவை நிறுவன செலவு குறைப்பு செயல்களை தூண்டுகின்றன?

பதில்:- இதற்கு பலகாரணங்கள் உண்டு. இன்றைய வணிக சூழலில் பணவீக்கம் விநியோகசங்கிலி இடையூறுகள் மற்றும் உலக அரசியல் உறுதியற்றதன்மை ஆகியவை முக்கியமான காரணங்கள் ஆகும். இந்த சவால்களால் கோவிட் காலத்தில் பெரும் வளர்ச்சியை பெற்ற பல நிறுவனங்கள் இப்பொழுது செலவு குறைப்பு செயல்களை எவ்வாறு செய்வது என்று யோசிக்கிறார்கள்.

கேள்வி:- ஒரு நிறுவனம் எடுக்கக்கூடிய சில முக்கிய முயற்சிகள் என்ன?

பதில்:- முயற்சிகள் நிறுவனத்திற்கு நிறுவனம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் முயற்சிகளை இரண்டாக பிரிக்கலாம். தொழிலாளர்கள் செலவு குறைத்தல் மற்றொன்று தொழிலாளர்கள் அல்லாத மற்ற செலவுகள் குறைத்தல்.

தொழிலாளர் செலவு குறைத்தல்

1. சேவை வழங்கல் மாற்றம்:

ஒரு நிறுவனத்தின் சேவைகளை யார் வழங்குவது எங்கிருந்து அந்த சேவைகளை வழங்குவது என்பதை தீர்மானிப்பது மிக முக்கியமானது. இதை தீர்மானிப்பது அந்தந்த நிறுவனத்தில் இருக்கும் தொழிலாளர்கள் திறன் மற்றும் தொழிலாளருக்கு அளிக்கப்படும். சம்பளம் ஆகியவை

2. தானியங்கி மற்றும் செயல் முறை மேம்பாடுகள்: இன்று பல நிறுவனங்கள் தொழிலாளர்கள் செயல் முறைகளை எப்படி மேம்படுத்த முடியும் மற்றும் அதை எப்படி கம்ப்யூட்டர் மூலமாக தானியங்கு செய்வது என்பதில் பெரும் கவனம் செலுத்துகிறார்கள்.

இதிலும் முக்கியமாக இன்று செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ. (AI)-ன் வளர்ச்சியால் வரப்போகும் காலத்தில் பெரும் மாற்றம் உண்டாகும்.

தொழிலாளர் அல்லாத செலவு குறைத்தல்

நிறுவனத்தின் உள் கட்டிட அமைப்பு மற்றும் மனை செலவுகள்: வசதிகளை மேம்படுத்துதல் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, கிளவுட் (Cloud) செயல்பாடுகள் மற்றும் பயன்பாட்டு இலாகாக்கள் குறித்த செலவுகளை குறைத்தல்.

2. வெளிப்புற செலவு குறைத்தல்: சமீபத்திய காலங்களில் வெளிப்புற செலவு குறைக்கும் செயல்களுக்கு பல நிறுவனங்கள் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதில் விலை நிர்ணயம் ஒப்பந்த விதிமுறைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களும் உள்ளடங்கும். இப்படி தான் ஒரு வெளிப்புற செலவு மேற்பார்வை அளிக்கும் நிர்வாகத்தை மாற்றம் அமைத்தது "செலவு குறைப்புகளுக்கு வழி வகுத்தது.

கேள்வி: சில பொதுவான குறைபாடுகள் யாவை?

பதில்:- செலவு குறைப்பு திட்டங்களை செயல்படுத்துவது சுலபமல்ல துரதிஷ்டமாக முக்கால்வாசி செயல் திட்டங்கள் தனது முழுபயனை அடைய தவறிவிடுகின்றன. இதற்கு பலகாரணங்கள் உண்டு. ஆனால் அதில் முக்கியமானவை.

1. தலைமைக் குழுக்களிடையே ஒற்றுமை இல்லாமை

2. நன்கு திட்டமிடப்பட்ட மாற்ற செயல் திட்டங்கள் இல்லாமை.

3. நீண்டகால திட்டமில்லாமல் குறுகிய காலத்தை மற்றும் யோசித்து செயல்படுவது.

கேள்வி:- இந்த சூழ்நிலையில் அமைப்புகள் என்ன வேண்டும்?

பதில்:- பெரும்பாலும் கவனிக்கப்படாத முதல்படி மாற்றத்தின் பார்வை மற்றும் இலக்குகளை தெளிவாக வரையறுப்பது மற்றும் குறுகியகால மற்றும் நீண்டகால நோக்கங்களை தெளிவாக வரையறுப்பது.

இவை வரையறுக்கப்பட்டவுடன் நிறுவனங்கள் கவனம் செலுத்தும் இடங்கள் எவை என்று பார்க்கலாம்.

1. தலைமை ஈடுபாடு: எதிர்கால வடிவமைப்பு மற்றும் பல முக்கியமான முடிவுகளுக்கு மூத்த தலைமைக்குள் ஒற்றுமை இருப்பது மிக முக்கியமான தேவையாகும். மேலும் செயல் திட்டங்களை கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் முழு நேர வேலையாக ஒருவரை நியமிக்கப்பட வேண்டும்.

2. இலக்குகளை திட்டமிடல்: தான் அடைய வேண்டும். இலக்கைவிட குறைந்தபட்சம் 30 சதவீதம் அல்லது 40 சதவீதம் அதிகமாக அடையும் திட்டங்களை அமைக்க வேண்டும். ஏனென்றால் நாம் அமைக்கும் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக அமையும் என்று சொல்ல முடியாது.

3. நன்கு திட்டமிடப்பட்ட மாற்ற மேலாண்மை: செலவு குறைப்பு திட்டங்கள் என்பது ஒரு நிறுவனத்திற்கும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஒரு பெரும் மாற்றம் ஆகும். இந்த மாற்றம் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த மாற்றத்தின் விழிப்புணர்வை தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மற்றும் அவை ஏன் அவசியம் அதனால் தாங்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது தெளிவாக கூறப்பட வேண்டும். செலவு குறைப்பு செய்வது சுலபமல்ல. ஆனால் பல்வேறு திட்டங்களை வழி நடத்தும் போது இங்கு கூறிய நுன்னறிவுகளை பயன்படுத்தி வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.