இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்!

டி.வி.எஸ். ஐகியூப்-ன் நள்ளிரவு திருவிழா- 100 சதவீத விலைச்சலுகை
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்!
Published on

டி.வி.எஸ். ஐகியூப் நள்ளிரவு திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. டி.வி.எஸ். ஐகியூப் 4.50 லட்சம் வாடிக்கையாளர்களை பிடித்து அதன் இலக்கை எட்டியுள்ளது. இதையொட்டி தான் இந்த திருவிழா அறிவிக்கப்பட்டது. டி.வி.எஸ். ஐகியூப் வாங்க விரும்புவோரின் மாலைப்பொழுதை மறக்க முடியாத நாளாக கொண்டாட இதுதான் நேரம். ஏனெனில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்ற வகையில் டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் எளிதாக இயக்கவும், பயணிக்க இதமாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.94,999 ஆகும்.

வாடிக்கையாளர்கள் ஏன் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றால், அவர்களுக்கு 100 சதவீத விலைச்சலுகை கிடைக்கும். மேலும் ஒருவருக்கு டி.வி.எஸ். ஐகியூப் வாகனம் இலவசமாக வழங்கப்படும்.

*டி.வி.எஸ். ஐகியூப் நள்ளிரவு திருவிழாவுக்காக 10 நாட்களும் நள்ளிரவு வரை டீலர்கள் ஷோரூம்களை திறந்து வைத்திருப்பார்கள். வாடிக்கையாளர்கள் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

*ஆன்லைன் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். டி.வி.எஸ். ஐகியூப் வாகனத்தையும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து வாங்கலாம்.

*மின்சார ஸ்கூட்டர் வாங்க நினைப்போருக்கு இதுதான் சரியான நேரம்.

*இத்திருவிழா தொடங்குவதற்கு முன்னரே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 150 கிலோ மீட்டர் தூரம் டி.வி.எஸ். ஐகியூப்பை ஓட்டலாம். 'சார்ஜ் குறைகிறதே, உடனே சார்ஜ் செய்ய வேண்டுமே' என்ற பயம் வேண்டாம். 2 மணி நேரம் 5 நிமிடத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் அளவிற்கு சார்ஜ் செய்யப்பட்டு விடும். இதனால் நீண்ட தூர பயணம் மேற்கொள்வோர், சார்ஜ் மையங்களை தேடி அலைய வேண்டியதில்லை. மேலும் சார்ஜ் மையத்திலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

118-க்கும் அதிகமான அம்சங்கள் டி.வி.எஸ். ஐகியூப் ஸ்கூட்டரில் அடங்கி உள்ளன. அதாவது பயணம் பற்றி தெரிவித்தல், அறிவுறுத்துதல் உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் பாதுகாப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

7 இஞ்ச் அளவிற்கு தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் வாகனத்தை ஓட்டியபடியே தொடுதிரை மூலம் தனக்கு வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வாகனத்தை ஓட்டியபடியே, ஒருவரை வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன வயர்லெஸ் வசதி மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் செல்போனில் வரும் குறுந்தகவல்கள் பற்றி அறிவிப்பது, பாடல்கள் கேட்பது என அனைத்து வசதிகளையும் வாகன ஓட்டி தனது விரல் நுணியில் பெற்று பயன்பெறலாம்.

டி.வி.எஸ். ஐகியூப் ஸ்கூட்டரில் 32 லிட்டர் அளவில் இருக்கைக்கு அடியில் பெரிதாக இடவசதி உள்ளது. மேலும் கால்களை வைக்கவும், முன்புறத்தில் பொருட்களை வைக்கவும் இடவசதி உள்ளது. ஹெல்மெட், காய்கறி, பைகள் மற்றும் தேவையான முக்கிய பொருட்களை வைத்துக்கொள்ள போதுமான இடவசதி போதுமான அளவில் டி.வி.எஸ். ஐகியூப்பில் உள்ளது.

இதன்மூலம் டி.வி.எஸ். ஐகியூப் வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான, ஒருங்கிணைந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இதன்காரணமாகவே டி.வி.எஸ். ஐகியூப் ஸ்கூட்டர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் விருப்பமான வாகனமாக உருவெடுத்து இருக்கிறது.

இந்த வாகனத்தை 12 மாத தவணை முறையில் பெறலாம். ரூ.7,999-ஐ முன்தொகையாக செலுத்த வேண்டும். மேலும் குறைந்த வட்டி விகிதத்திலும், எளிய முறையிலும் வாகன கடன் பெற்று டி.வி.எஸ். ஐகியூப்பை ஓட்டிச் செல்லலாம். இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். இதுதான் நீங்கள் மின்சார ஸ்கூட்டருக்கு மாற உகந்த நேரம், மேலும் உங்கள் வீட்டுக்கு டி.வி.எஸ். ஐகியூப்பை இலவசமாக ஓட்டிச்செல்லும் நேரம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com