கேமரா ஆல்ரவுண்டர், பேட்டரி மான்ஸ்டர்… எப்படி இருக்கு OPPO Reno 15c #Review

நம்முடைய பார்வையில் OPPO Reno 15c ஸ்மார்ட்போன், எந்தவித சமரசமும் இல்லாமல், தங்களது அன்றாட பரபரப்பான வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்கும்படியான நம்பகமான மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்போனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
OPPO Reno 15c
OPPO Reno 15c
Published on
ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் முன்னர் நாம் எதையெல்லாம் கருத்தில் கொள்வோம்?

அதைக் கொஞ்சம் பட்டியலிடுவோமே? முதலில் நாம் பார்ப்பது டிசைன் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த ஸ்மார்ட்போனின் லுக் எப்படியிருக்கிறது என்பதைத்தான். உங்கள் தனிப்பட்ட அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உங்கள் போன் இருக்க வேண்டும், ப்ரீமியமாகவும் தினசரி பயன்பாடுகளை சமாளிக்கும் வகையிலும் இருக்க வேணும். இரண்டாவது, அன்றாட பணிகளை முடிக்கும் வகையில் நம்பகமகான பாட்னராக இருக்க வேண்டும். காலையில் வேலைக்குச் செல்கையில் இன்ஸ்டா ரீல்ஸைப் பார்க்கத் தொடங்கி, மெசேஜ்களுக்கான பதிலளிப்பது போன்றவைகளுடன் தொடங்குவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதேபோல், நெட்வொர்க் பிரச்சனையான பகுதிகளில் ஒருவேளை யூடியூபில் வீடியோ அப்டேட்டுகளைப் பார்ப்பதாக இருக்கலாம். மாலை நேரங்களில் நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு, அங்கு எடுத்த போட்டோ, வீடியோக்களை எடிட் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுடலாம். இப்படி கேமராவை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு கேமரா குவாலிட்டி என்பது அத்தியாவசியம்.

இந்த இடத்தில் தான் OPPO Reno 15c எல்லா விஷயங்களிலும் ஸ்கோர் செய்கிறது. இதன் வசதிகள் அனைத்தும் வெறும் பேப்பரில் குறிப்பிட்டிருப்பவை மட்டுமல்ல; உங்கள் அன்றாட வாழ்வியலோடு எளிதில் இணைந்துகொள்ளும் வகையிலான ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு செக்மெண்டும் ஒவ்வொரு தேவைகளைக் கொண்டிருக்கிறது. இதனால் தான், பயனாளர்களின் பன்முகப் பயன்பாட்டுத் தேவையை நிறைவு செய்யும் வகையில், OPPO நிறுவனம் Reno15 சீரிஸில் ப்ரீமியமாக OPPO Reno 15c-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. OPPO Reno 15c -யில் என்ன ஸ்பெஷல்.. தெரிஞ்சுக்கலாமா?

டிசைன் & பில்ட் குவாலிட்டி - அழகுக்காக மட்டுமல்ல; வாழ்வியலோடு இணைந்தது!

OPPO Reno 15c-ஐ பார்த்தவுடன் நம்மைக் கவர்வதே அதன் டிசைன் தான். நீண்டதூர கார் பயணத்தின் போதோ அல்லது கூட்டமான மார்க்கெட்டில் நடந்துகொண்டிருக்கும்போதோ உங்கள் ஸ்மார்ட்போனை கையில் பிடித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த போன் எப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்... அளவில் பெரிதாக அது இருக்க வேண்டும் என்றா நினைப்பீர்கள்? மாறாக, அது ப்ரீமியமாக இருக்க வேண்டுமென்று தானே நினைப்பீர்கள்?! இந்த பேலன்ஸில் தான் Reno 15c பெரிய அளவுக்கு ஸ்கோர் செய்கிறது. கிளாஸ் பேக்கும் அதனுடைய மேட் ஃபினிஷும் ஸ்மார்ட்போன் பின்புறத்தை க்ளீனாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால், அடிக்கடி அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. திறன்வாய்ந்த பேட்டரியைக் கொண்டிருந்தாலும் 8.1 மி.மீ ஃப்ரேம் மற்றும் இதன் எடைகுறைந்த அமைப்பு சிங்கிள் ஹேண்ட் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கிறது.

எப்போதும் நாம் விழிப்போடு இருக்க முடியாதல்லவா? (எல்லோருடைய இயல்பும்தானே), அந்த சமயத்தில் நீடித்து உழைக்கும் தன்மைதான் அந்தப் பொருளின் பாதுகாப்பை உறுதி செய்யும். அந்த வகையில், OPPO Reno 15c மிகவும் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் தூசு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பளிக்கிறது (IP66, IP68, IP69). அதேபோல், ஷாக் அப்சார்ஃபிங் டிசைனும் இருப்பதால் இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கத் தேவையில்லை. அதேபோல், இதன் அலுமினியம் அலாய் ஃப்ரேம் ஒரு ஃப்ளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஃபீலைக் கொடுக்கிறது.

OPPO Reno 15c
OPPO Reno 15c
சாஃப்ட்வேர் & AI - வெறும் வாய்ஜாலமல்ல.. சிறந்த பயன்பாடு!

ColorOS 16-ல் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஸ்மூத்தான அனிமேஷன்களையும் தெளிவான இன்டர்ஃபேஸையும் அளிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கான OS அப்டேட்டுகள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உதவியுடன் வரும் இந்த போன், உறுதியானது மட்டுமல்ல டிஜிட்டலாகவும் நீடித்து உழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

OPPO-வின் புத்தம் புதிய  Luminous Rendering Engine-ஆன Trinity Engine இல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் Seamless Animation ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த இன்டர்ஃபேஸ், ஸ்க்ரோலிங் மற்றும் மல்டிடாஸ்கிங் முதல் கேமிங் மற்றும் content consumption வரையிலான உங்களின் அன்றாடப் பணிகளில் தடையின்றியும் விரைவாகவும் செயல்படுகிறது.

போட்டோ எடிட்டிங் முதல் உங்கள் வேலைகளை எளிதாக்க, உங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே பிரத்யேகமாக AI வசதிகளோடு அறிமுகமாகியிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். உதாரணத்துக்கு, 

  • ஒரு மீட்டிங்கில் இருக்கிறீர்கள். அந்த மீட்டிங்கில் விவாதிக்கப்படும் விஷயங்களை நோட்ஸ் எடுக்க வேண்டுமா → AI Recording வசதியோடு எளிதில் இதை செய்து முடிக்க முடியும்.

  • ஸ்மார்ட்போனில் திடீரென ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்கிறீர்கள் → AI Mind Space உடனே அதை சேமித்து வைத்துக்கொண்டு Google Geminiயில் உங்கள் prompts அடிப்படையில் அதைப்பற்றி கூடுதலாக உங்களால் உடனே அறிந்துகொள்ள முடியும்.

  • வேலை தொடர்பான இ-மெயில் அல்லது சோசியல் மீடியாவுக்கான போஸ்ட் போடத் தயாராகிறீர்கள் என்றால் → உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறது AI Writer. இந்த உடனடி உதவி உங்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

இந்த வசதிகள் எல்லாம் எளிதில் கடந்துபோய்விடக் கூடியது அல்ல; தினசரி அன்றாட வேலைகளில் நீங்கள் பயன்படுத்தக் கூடியவை.

பெர்ஃபாமன்ஸ் - உங்கள் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றது!

பெர்ஃபாமன்ஸ் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் டெய்லி டாஸ்குகளை OPPO Reno 15c எளிதாக ஹேண்டில் செய்ய முடியும். ஸ்நாப்டிராகன் 6 சீரிஸ் சிப்செட்டுடன்  வரும் LPDDR4X RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் மூலம் மல்டி டாஸ்கிங், சோசியல் மீடியா பிரவுசிங் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங்கை சீம்லெஸ்ஸாக அனுபவிக்க முடியும். 

வேலை நேரத்தில் மல்டி-டாஸ்கிங்காக இருந்தாலும் சரி; இரவுகளில் அதிக நேரம் பயன்படுத்தினாலும் சரி, இந்த ஸ்மார்ட்போனில் உங்கள் அனுபவம் என்பது எந்தவொரு தொந்தரவும் இல்லாத எளிமையான அனுபவமாக இருக்கும். சிக்னல் வீக்கான இடமோ, கூட்டமான மார்க்கெட் பகுதியோ உங்களின் ஸ்ட்ரீமிங்கும் பிரவுசிங்கும் தடையே இல்லாமல் தொடரும். இது நிச்சயம்  உங்களின் பாராட்டுக்கு உரிய வசதியாகவே இருக்கும்.

கேமரா - உங்கள் சோசியல் லைஃபுக்காகவே உருவாக்கப்பட்டது!

கேமரா விஷயத்தில் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசுவோம். நம்மில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனை எடுப்பது நம்முடைய சிறப்பான தருணங்களை போட்டோக்களாகப் பதிவு செய்து, அதைப் பகிருவதற்காகத்தானே? இதைக் கருத்தில் கொண்டால் OPPO Reno 15c ஸ்மார்ட்போனின் Reno’s PureTone technology உடன் வரும் 50 MP அல்ட்ரா கிளியர் கேமரா ஷார்ப்பான போட்டோக்களை, இயல்பிலான நிறங்களோடு அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 

இதில் நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது Popout feature

OPPO Reno 15c
OPPO Reno 15c

உங்களின் ஸ்பெஷலான தருணங்களை ஒரே ஒரு போட்டாவாக மட்டும் பதிவு செய்யாமல், Popout வசதி மூலம் அந்தத் தருணத்தை 2 முதல் 9 போட்டோக்களாக ஒரே ஃப்ரேமில் பதிவு செய்ய முடியும். அந்தத் தருணத்தில் நீங்கள் ஃப்ரேமுக்கு வெளியிலும் போய்விட்டுத் திரும்ப முடியும். போட்டோ எடிட்டிங்குக்கு அதிக நேரம் செலவழித்துக் கிடைக்கக் கூடிய இந்த வகை போட்டோவை எந்தவித சிரமமும் இன்றி எளிதில் உங்களுக்குக் கிடைக்கும். இதுமட்டுமில்லாமல், AI editing tools ம்ற்றும் Video Editing 2.0 மூலம் உங்களால் இந்த ஒரே டிவைஸில் ஷூட் செய்து எடிட் செய்து, அதை உங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு செய்துகொள்ளவும் முடியும். இதற்கென உங்களுக்கு கூடுதலாக எந்தவொரு செயலியின் உதவியும் தேவையில்லை.

பேட்டரி - தி ரியல் கேம் சேஞ்சர்

OPPO Reno 15c ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அதன் பேட்டரி பெர்ஃபாமன்ஸ். இதில் வரும் 7000mAh பேட்டரி தான் இந்த செக்மெண்டிலேயே மிகவும் பெரியது. இதனால், உங்களின் சராசரியான பயன்பாட்டுக்கே OPPO Reno 15c ஸ்மார்ட்போன் 1.5 முதல் 2 நாட்களுக்கான சார்ஜை வழங்கும். இதனுடன் வரும் 80W SUPERVOOC™ ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும். பத்து நிமிட சார்ஜிங் மூலம், 5.4 மணி நேர வாட்ஸ் அப் மற்றும் யூடியூப் பயன்பாடு மற்றும் 3.4 மணி நேரம் இன்ஸ்டாகிராமையும் பயன்படுத்த முடியும். 0-100% சார்ஜிங்கை 64 நிமிடங்களில் எட்டிவிட முடியும். இது அடிக்கடி பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

OPPO Reno 15c
OPPO Reno 15c
ஏன் OPPO Reno 15c ஸ்மார்ட்போனை மிஸ் பண்ணக் கூடாது?

OPPO Reno 15c அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. அதே நேரம், நமது தினசரிப் பயன்பாடுகளுக்கு எதெல்லாம் முக்கியமாகத் தேவையோ, அந்தத் தேவைகளை சரியாகப் பூர்த்தி செய்வது எதோ - அதில் கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

உறுதியும் ஸ்டைலும் ஒருபுறம் என்றால், மிகைப்படுத்தல் இல்லாத ஆற்றல் மற்றும் குழப்பங்கள் இல்லா தெளிவான ஒரு ஸ்மார்ட்போனாகவும் இருக்கிறது. 

உங்கள் வாழ்வோடு எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதில் பொருந்திப்போகும் வகையிலான ஒரு ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இது அந்த லிஸ்டில் நிச்சயம் டாப் இடம் பிடிக்கும்.

என்ன விலை.. எங்கே கிடைக்கும்?

8GB + 256GB – ₹34,999

12GB + 256GB – ₹37,999

Amazon, Flipkart, mainline retail outlets, and the OPPO E-store.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com