ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரபாஸின் சலார் (போர் நிறுத்தம்)


மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான சலார் (போர் நிறுத்தம்) திரைப்படம் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஆகும். சலார் திரைப்படத்தின் பிரம்மாண்ட பிரச்சார விளம்பரம் குஷி அட்வர்டைசிங் நிறுவனத்தின் மூலம் மிக புதுமையாகவும் சிறப்பாகவும் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ரசிகர்களின் பிரமிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கும் குஷி நிறுவனத்தின் சலார் திரைப்படத்தின் விளம்பரம் பிரத்தியேகமானது. 120 அடி உயர பிரபாஸ் அவர்களின் கட்-அவுட் ஆகட்டும், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்திருக்கும் விளம்பரமாகட்டும், ரசிகர்கள் மத்தியில் சலார் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி ஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில் "சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்து பிரசாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில் உருவான சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கி இருப்பதால் பிரம்மாண்டமான விளம்பர பிரச்சாரம் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா திரைப்படங்களுக்காக பணியாற்றிய அனுபவம் உள்ளதால் சலார் திரைப்படத்தின் விளம்பர பிரச்சாரத்தையும் குஷி அட்வெர்டைஸிங் நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய எல்லா கோணங்களையும் திட்டமிட்டோம்" என்று கூறினார்.

குஷி அட்வெர்டைஸிங் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் விஷ்ணு தெல்லாங்க் கூறுகையில் "பல ரெக்கார்டுகளை முறியடிக்கும் வகையில் டிஜிட்டல் தளங்களிலும், நாட்டின் பல இடங்களிலும், ஊடகங்களிலும், பெரிய அளவில் சலார் திரைப்படத்தின் விளம்பரம் சென்றடைந்துள்ளது. எங்களை நம்பி இந்த பணியை ஒப்படைத்த ஹோம்பேல் ஃபில்ம்ஸ் நிறுவனத்திற்கு குஷியின் சார்பாக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்ததால் இந்த விளம்பர பிரச்சாரத்தை மிக நுணுக்கமாக திட்டமிட்டோம். சிறப்பான விளம்பர யுத்தியை கொண்டு சலார் திரைப்படத்தின் விளம்பரத்தை ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில் கொண்டு சேர்த்துள்ளோம். மும்பையின் பிரபலமான மால் ஒன்றில் பிரபாஸ் அவர்களின் 120 அடி உயர கட்- அவுட்டை வைத்தது, பல பிரபல ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் நிறைய விளம்பர யுக்திகளை பயன்படுத்தியது, திரைப்படத்தின் போஸ்டர்களை தாங்கிய பல வாகனங்களின் ஊர்வலங்களை நடத்தியது போன்றவற்றுடன், பிரபல டிவி செய்தி சேனல்கள், ரேடியோ, ஓஓஎச், காபி ஷாப், மால், விமான நிலையம் மற்றும் பல ஊடகங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரம்மாண்டமான விளம்பரங்களை செய்துள்ளோம்", என்று கூறினார்.

ஹோம்பேல் ஃபில்ம்ஸ் கர்நாடகாவின் மிகப்பெரிய கன்னட மற்றும் பல இந்திய மொழி திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படங்களான கேஜிஎப், கேஜிஎஃப் சாப்டர் 2 மற்றும் காந்தாரா ஆகிய திரைப்படங்களை இவர்கள் இயக்கியுள்ளனர்.

குஷி அட்வர்டைசிங் நிறுவனம், இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் திரைப்படங்களை சந்தைப்படுத்தும் நிறுவனம் ஆகும். நாடெங்கிலும் 30 நகரங்களில் 300க்கும் மேற்பட்ட பிராண்டுகள், தயாரிப்பு நிறுவனங்கள், மால்கள், மல்டிபிளக்ஸ், தொழில் பூங்காக்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய நிறுவனம்.