சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு நிறைந்த 'காபி வித் காதல்' நவம்பர் 4-ந் தேதி வெளியாகிறது

சுந்தர் சி இயக்கியுள்ள புதிய படம், ‘காபி வித் காதல்’. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.
Published on

சுந்தர் சி இயக்கியுள்ள புதிய படம், 'காபி வித் காதல்'. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன் உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி 'காபி வித் காதல்' படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது:-

படம் முழுக்க மக்கள் புன்சிரிப்புடன் ரசிக்கக் கூடிய வகையில் ஒரு 'பீல் குட்' படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஊட்டி பின்னணியில் ஒரு அழகான குடும்பத்தில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், காதல், மோதல், நகைச்சுவை என ஒரு அழகான தொகுப்பாக இந்த படம் தயாராகி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை இன்னும் மெருகேற்றி இருக்கிறது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் படம் சிறப்பாகவே வந்திருக்கிறது.

நடிகர்-நடிகைகளின் நேர்த்தியான நடிப்பாலும், திரைக்கலைஞர்களின் உண்மையான உழைப்பாலும் இந்த படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே வந்திருக்கிறது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிச்சயம்

நிறைவேற்றும். தமிழகம் முழுவதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது, என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com