

ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் அன்னை வி.ஜி.சரவணன் நேற்று காலை சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து தஞ்சை நகரம், சங்கரன்குடியிருப்பு, கந்தன்குடியிருப்பு, வேலாயுதபுரம், ஆலங்கிணறு, ஞானியார்குடியிருப்பு, குலசேகரன்குடியிருப்பு, புதுக்குளம், சிதம்பராபுரம், சொக்கலிங்கம், அமுதுண்ணாகுடி, வேலன்புதுக்குளம், நெடுங்குளம், மேட்டுகுடியிருப்பு, கொம்பன்குளம், கீழக்குளம், இரட்டைகிணறு, துவர்க்குளம், வரிப்பிலான்குளம், கலுங்குவிளை, கூவக்கிணறு, மடத்துவிளை, கோமாநேரி உள்பட கிராமங்களில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். மேலும் வேட்பாளர் அன்னை வி.ஜி.சரவணன், சாத்தான்குளம் சேகர குருவானவர் டேவிட் ஞானையாவிடம் ஆசி பெற்றார்.
பிரசாரத்தில் வேட்பாளர் அன்னை வி.ஜி. சரவணன் பேசும்போது கூறியதாவது:-
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் எந்த திட்டங்களும் சரிவர செய்யவில்லை. பொது மக்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் தீரவில்லை. நமது தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவித்துள்ளார். அந்தத் திட்டங்களை செயல்படுத்த அவர் முதல்-அமைச்சராக வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பெரியசாமி, அருள், அருள்ராஜ், பலவேசம். மாரியப்பன். ஆனந் குணசேகரன், அற்புதராஜ், பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி த.வெ.க. பொறுப்பாளர் ஜெகன், நகர செயலாளர்கள் ராஜா, பாலசுந்தர், சரவணன், அம்மன்முத்து, ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் விஜயமுத்து, மாவட்ட இணை செயலாளர் சுடலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிமுருகன், மாணவரணி செயலாளர் மாரீஸ்வரன், மகளிரணி சித்ரா, இளைஞரணி துணை செயலாளர் சோமராஜன், இணை செயலாளர்கள் மணிகண்டன், பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆழ்வார் விஜய், முத்துரவி, அரசன்முத்து சிறப்பு பேச்சாளர் அஹம்மது இப்ராஹீம், சிவத்தையாபுரம் வில்சன் மகாராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.