அதிரடி திரைப்படங்களோடு, ZEE5 க்லோபல் 'சவுத் எக்ஸ்பிரஸ்' பிரசாரத்தை துவக்குகிறது


அதிரடி திரைப்படங்களோடு, ZEE5 க்லோபல் சவுத் எக்ஸ்பிரஸ் பிரசாரத்தை துவக்குகிறது
x

ந்த டிஜிட்டல் பொழுதுபோக்கு யுகத்தில் , மொழி மற்றும் எல்லைகள் மறைந்து போகின்றன; பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்டம் விரிந்து செல்கிறது. இதற்கு ZEE5 க்ளோபலின் உள்நாட்டு பொழுதுபோக்கு நிகழ்சிகள் சர்வதேச சந்தைகளில் பிரபலமாகி வருவது புதிய பார்வையாளர்கள் உருவாகின்றனர் எனபதற்கு ஒரு சான்றாகும். ZEE5 க்லோபல், கடந்த ஒர் ஆண்டில், தன்னுடைய தென்னிந்திய மொழிகளின் -தமிழ், தெலுங்கு, கன்னடா, மலயாளம் திரைப்படங்கள், வெப் சீரீஸ் மற்றும் ஏற்கனவே வெளியானவைகள் போன்றவற்றின் மூலம் சர்வதேச அளவில் சாதனை படைக்கும் அளவிற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. அதன் மொத்த பார்வையாளர் எண்ணிக்கையில், இந்தி அல்லாத தலைப்புகளில் மட்டுமே 50% திற்கு மேலாக பார்வையாளர்களை பெற்று உள்ளது.

இந்த பார்வையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ZEE5 க்லோபல், சமீபத்தில் 'சவுத் எக்ஸ்பிரஸ்' என்ற பிரசாரத்தை துவக்குகிறது. இதில் தென்னிந்திய திரைப்படங்களின் பிரத்தியேக தொகுப்பு அடங்கும்.

'செம்ம ஸ்வாக்', 'தோப்பு தலஸ்' உடன் ZEE5 க்லோபலின் 'சவுத் எக்ஸ்பிரஸ்' வெளிவருகிறது

தென்னிந்திய திரைப்படங்கள் அதன் அதிரடி சண்டை காடசிகளுக்கும், பஞ்ச் டயலாக்கிற்கும், கற்பனைக்கு அப்பாற் பட்ட சூப்பர் ஸ்டார்களுக்கும், மசாலாக்களுக்கும் புகழ்பெற்றது. தன் பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் அதிகரிக்க ZEE5 க்லோபல் 'சவுத் எக்ஸ்பிரஸ்' பிரச்சாரத்தை துவங்குகிறது. இதில் தென்னிந்திய மொழிகளில் உள்ள அதிரடி திரைப்படங்களில் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. 1,000 த்துக்கும் அதிகமான திரைப்படங்களை கண்டு களிக்க மிக சரியான இடம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள் உள்ளன. இனி ஒரே கிளிக்கில் வீட்டில் இருந்தபடியே எல்லா அதிரடி திரைப்படங்கள், இசை, நாடகம், நாட்டியம் என எல்லா வற்றையும் கண்டுகளிக்கலாம்.

இந்த பிரச்சாரத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சில நடைமுறை பேச்சு வழக்கில் பயன்படுத்தப் படும் பிரபலமான சொற்களான 'DHULU ACTION' (தெலுங்கில் "வேற லெவல் அதிரடி") 'SEMMA SWAG' (மிக அருமை ), 'THOPPU THALAS' (அபாரமான சூப்பர் ஸ்டார்ஸ் தெலுகு + தமிழ்) போன்ற சொற்களை பயன் படுத்துவது தான். இம்மாதிரி சொற்களை பயன்படுத்துவது தென்னிந்திய கதைகளோடு ஆழமான தொடர்பை ஏற்படுத்துகிறது.

மிகப் பெரிய அதிரடிகள்.

ZEE5 க்லோபல், அஜித் குமார் நடித்த 'வலிமை', S .S ராஜமௌலியின் RRR ரௌத்திரம், ரணம், ருத்திரம், போன்ற அதிரடி தலைப்புக்கள் மூலம், தென்னிந்திய தலைப்புக்கள் உலக அரங்கில் எடுபட செய்வதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தலைப்புக்கள் திரைப்படங்கள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 5 - 10 கோடி பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறது. தென்னிந்திய மொழிகளின் தலைப்புகளுக்கான தேவை அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது; தற்போது ZEE5 க்லோபலில் உள்ள தொகுப்புக்கள் சுமார் 190 நாடுகளில் பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய மொழி தலைப்புகளின் உண்மையான பொழுது போக்கு தரம்

தென்னிந்திய மொழி கதைகளை முன்னிலை படுத்திடுவதற்கு ZEE5 க்லோபல், 2002ல் தனது முதலீட்டை இரட்டிப்பாக்குகிறது; குறிப்பாக தமிழ் மற்றும் தெலுகு. 2022 ஏப்ரலில், பிரகாஷ் ராஜின் 'ஆனந்தம்' தொடர் உட்பட பல சிறப்பான தமிழ் தொடர்களை அறிவித்துள்ளது. தற்போது வெளியான 'வீட்ல விஷேசம்' மற்றும் தயாரிப்பில் உள்ள 'பப்பேர் ராக்கெட்' உட்பட ஏராளமான புதிய சுவாரசியமான தலைப்புக்கள் உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான 'காலிவான' ரெக்ஸ்', 'மன நீல டேங்க்' தெலுங்கு தலைப்புக்கள் உட்பட 2022க்கான தலைப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அர்ச்சனா ஆனந்த் , தலைமை வணிக அதிகாரி, ZEE5 க்லோபல், கூறுகையில், "அமெரிக்காவில் அசுரத்தனமான தென்னிந்திய மொழி கதைகளுக்கான தேவையை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாங்களும் எங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளோம். தென் ஆசிய பார்வையாளர்களின் வளர்ந்து வரும் பொழுது போக்கு ஆர்வத்தை கவனமாக பூர்த்தி செய்யும் வகையில் ZEE5 க்லோபல் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளின் தொலைகாட்சி தொடர்கள், திரைப்படங்கள் கொண்ட நூலகத்தை கொண்டுள்ளது. எங்களின் இந்த தேர்ந்தெடுக்கப் பட்ட சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் கொண்ட 'சவுத் எக்ஸ்பிரஸ்' ப்ரிச்சரம் என்பது , அருமையான இன்றியமையாத பேச்சு வழக்கை கொண்ட தென்னிந்திய பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஓர் அஞ்சலி என்றால் மிகையல்ல", என்றார்.

பயனாளர்கள் கூகிள் பிளே ஸ்டோர்/IOS ஆப் ஸ்டோரிலிருந்து ZEE5 ஆப்பை தடையின்றி உபயோகிக்க கருவிகள், ஆப்பிள் டிவி , ஆன்ராய்ட் டிவி, மற்றும் அமேசான் பயர் ஸ்டிக் போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் www.ZEE5.com இணையதளத்திழும் காணலாம்.

ZEE5 க்ளோபல் பற்றி

ZEE5 க்ளோபல், சர்வதேச ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிலையமான ZEE பொழுதுபோக்கு நிறுவனத்தால் (ZEEL ) துவங்கப்பட்ட டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாகும். ZEE5 க்ளோபல் 2018 ஆக்டோபரில் 190+ நாடுகளில் துவங்கப்பட்டது; உள்ளடக்கம் 18 மொழிகளில் உள்ளது: ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுகு,பெங்காலி, மலையாளம், கன்னட, மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி,பஞ்சாபி, மேலும் மலாய், தாய், பஹாசா, உருது, பங்காளா மற்றும் அரபிக் உள்ளிட்ட ஆறு சர்வதேச மொழிகள் கொண்டுள்ளது. இந்தத் தளம் மிக சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், இசை நாடகங்கள் மற்றும் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் கொண்டுள்ளது. ZEE5, 15 வழிசெலுத்தும் மொழிகள், பதிவுகளை பதிவிறக்கம் செய்யும் வசதி, தடையற்ற வீடியோ ப்ளேபேக் மற்றும் ஒலி தேடல் போன்ற சிறப்பம்சங்களை வழங்குகிறது.

ZEE5 Global Twitter: https://twitter.com/ZEE5Global

ZEE5 Global LinkedIn: https://www.linkedin.com/company/zee5global/