அக்னி சிறகுகள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் திகில் படம், `அக்னி சிறகுகள்.' இந்த படத்தின் கதை-திரைக்கதை எழுதி இயக்குகிறார், நவீன். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார்.
அக்னி சிறகுகள்
Published on

டி.சிவாவின் புதிய படம் ``அக்னி சிறகுகள்,' திகில் பட ரசிகர்களுக்கு பெரிய விருந்து!''

அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் திகில் படம், `அக்னி சிறகுகள்.' இந்த படத்தின் கதை-திரைக்கதை எழுதி இயக்குகிறார், நவீன். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். அருண் விஜய்-விஜய் ஆண்டனியுடன் கதாநாயகிகளாக ஷாலினி பாண்டே, அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரெய்மா சென், பிரகாஷ்ராஜ், ஜே.எஸ்.கே. உள்பட முன்னணி நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள். சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து ரஷியாவின் செயின் பீட்டர்ஸ்பர்க், கஜகஸ்தானின் அல்மேட்டி என வித்தியாசமான `லொகேஷன்'களில் படம் வளர்ந்து வருகிறது.

தற்போது கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில், 9 டிகிரி கடும் குளிரில் ஒரு பயங்கர சண்டை காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதுபற்றி தயாரிப்பாளர் டி.சிவா கூறும்போது, ``அக்னி சிறகுகள் படம், திகில் பட ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கடுமையான பனியை பொருட்படுத்தாமல் படக்குழுவினர் அனைவரும் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் தருகிறார்கள். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com