அக்னிபத் திட்டம் ஆா.எஸ்.எஸ். அமைப்புக்கு உரியது- காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

அக்னிபத் திட்டம் ஆா.எஸ்.எஸ். அமைப்புக்கு உரியது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
அக்னிபத் திட்டம் ஆா.எஸ்.எஸ். அமைப்புக்கு உரியது- காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
Published on

கோலார் தங்கவயல்:

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாசில்தார் அலுவலகம் எதிரே எம்.எல்.ஏ. நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் வளர்ச்சிப் பணிகள் செய்வதில் பா.ஜனதா அரசு தவறிவிட்டது. வளர்ச்சிப் பணிகள் செய்யாமல் இருக்கும் மத்திய அரசு அதை மூடிமறைக்க யோகா போன்ற நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. நாட்டில் கோடிக்கணக்கானோர் பசி பட்டினியால் செத்து மடிகின்றனர். அதை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி மக்களுக்கு பயன் அளிக்காத திட்டங்களை அறிவித்து வருகிறார். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு உரியது. அந்த திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com