அக்னிபத் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும்- மத்திய மந்திரி கிரிசன் பால் குர்ஜார் பேச்சு

அக்னிபத் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்று மத்திய மந்திரி கிரிசன் பால் குர்ஜார் தெரிவித்தார்.
அக்னிபத் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும்- மத்திய மந்திரி கிரிசன் பால் குர்ஜார் பேச்சு
Published on

மண்டியா:

வேலை வாய்ப்பு அதிகரிப்பு

மண்டியா மாவட்டத்தில் அம்பேத்கர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மின்சார மற்றும் கனரக தொழில்துறை மந்திரி கிரிசன் பால் குர்ஜார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் 65 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டின் வருங்கால தூண்கள். நாட்டின் வளர்ச்சி குறித்து இப்போது இருந்தே இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இதற்கான அனைவரும் கைகோர்த்து செயல்படவேண்டும். நீங்கள் நினைத்தால் இந்தியாவை 25 ஆண்டுகளுக்குள் விஸ்வகுருவாக மாற்ற முடியும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும், வளர்ச்சி பணிகளும் கிடப்பில் போடப்படவில்ல. இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலை இல்லாத திண்டாட்டம் ஏற்படகூடாது என்பதற்காக அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும். இதில் சேரும் இளைஞர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும். இதற்கு 17 முதல் 23 வயது இளைஞர்களை தேர்வு செய்வதற்கு காரணம், அவர்களிடம் நாட்டுப்பற்றை அதிகரிக்கவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிள் போட்டி

இதைதொடர்ந்து மண்டியா பந்தேகவுடா படாவனேயில் மாரத்தான், சைக்கிள் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளை மத்திய மின்சாரத்துறை மந்திரி கிரிசன் பால் குர்ஜார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இங்கு நான் கலந்து கொண்ட ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிகவும் திருப்திகரமாக இருந்தது. பொதுமக்கள் மனம் திறந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின்னர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் எல்லைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. திறமையான அதிகாரிகளை வைத்து அரசு பணிகளை திறமையாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கிஷான் யோஜனை, பொதுமக்களுக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய கார்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஜல்ஜீவன் மிஷன் உள்பட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாகவுள்ளது. இதன்மூலம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com