நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய மந்திரிசபையில் ஒப்புதல்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய மந்திரிசபையில் ஒப்புதல்
Published on

பெங்களூரு,

தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது தான். தற்போது மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு படிப்படியாக 4 தவணைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2019-2020-ம் ஆண்டில் ரூ.8,656 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அதேபோல் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.7,876 கோடியும், 2021-2022-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7,231 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com