எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
Published on

காரைக்கால்

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. போட்டியை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர். காரைக்கால் அரசு விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய போட்டி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com