இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பட்னாவிசை சந்தித்து அஜித்பவார், சகன் புஜ்பால் ஆலோசனை

இலாகா ஒதுக்கீடு தொடர்பாக தேவேந்திர பட்னாவிசை சந்தித்து அஜித்பவார், சகன் புஜ்பால் ஆலோசனை நடத்தினர்.
இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பட்னாவிசை சந்தித்து அஜித்பவார், சகன் புஜ்பால் ஆலோசனை
Published on

மும்பை, 

இலாகா ஒதுக்கீடு தொடர்பாக தேவேந்திர பட்னாவிசை சந்தித்து அஜித்பவார், சகன் புஜ்பால் ஆலோசனை நடத்தினர்.

பதவி ஏற்பு

மராட்டிய அரசியலில் புதிய திருப்பமாக நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் ராஜ்பவன் சென்று பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்தார். அடுத்த சில மணி நேரத்தில் ராஜ்பவனில் நடந்த விழாவில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது கட்சியை சேர்ந்த 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இருப்பினும் புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஆலோசனை

இந்த நிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி சகன் புஜ்பால் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் அதிகாரப்பூர்வ பங்களாவான 'மேக்தூத்'துக்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அஜித்பவாரின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அஜித்பவார் கடந்த காலங்களில் நீர்வளம், மின்சாரம் மற்றும் நிதி போன்ற துறைகளை தன்வசம் வைத்திருந்தார். தற்போது இந்த இலாகாக்கள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் உள்ளது. அதுமட்டும் இன்றி உள்துறையைம் தேவேந்திர பட்னாவிஸ் தனது பொறுப்பில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com