ரசிகர்களை சந்தித்த அஜித்

சென்னையில் நடைபெற்ற துணிவு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு படப்பிடிப்பில் நடிகர் அஜித் பங்கேற்றார், அவர் ரசிகர்களை சந்தித்த பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
ரசிகர்களை சந்தித்த அஜித்
Published on

அஜித்குமார் தனது ரசிகர்கள் அவரவர் குடும்பங்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையோடு இருக்கிறார். இதனாலேயே ரசிகர் மன்றத்தை கலைத்தார். ஆனாலும் பைக் பயணங்களில் ரசிகர்களை சந்திக்க தவறுவது இல்லை. அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அஜித்குமார் நடித்து வரும் துணிவு படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அஜித்குமார் படப்பிடிப்புக்கு வந்துள்ள தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த ரசிகர்கள் பலர் திரண்டு அவரை பார்க்கும் ஆவலில் காத்து நின்றனர். இதை அறிந்த அஜித்குமார் கேரவேனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர். தினமும் இது நடக்கிறது. அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோவை வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். துணிவு படம் 1987-ல் பஞ்சாபில் நடந்த ஒரு வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது. நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com