அஜித்தின் அடுத்த படம்!

அஜித்குமார் தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவு-பகலாக நடித்து வருகிறார்.
அஜித்தின் அடுத்த படம்!
Published on

விஸ்வாசம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை பற்றிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் சிவா டைரக்ஷனில், அஜித் நடித்தார். அடுத்து அவர், வினோத் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

அஜித்-வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்று பேசப்படுகிறது!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com