

கோட்டுச்சேரி
காரைக்கால் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக அமர்ந்திருந்த பயணிகள் முன்பு, ஒருவர் மது குடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரைச் சேர்ந்த புஷ்பராஜ் (வயது 43) என்பவரை கைது செய்தனர்.
அவர் மீது பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.