ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு

புதுவை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு
Published on

புதுச்சேரி

புதுவை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.8 கோடி ஒதுக்கீடு

புதுவை அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் 95 சதவீதத்தை அரசு வழங்கி விடுகிறது. அதன்படி ஜூன், ஜூலை மாதத்துக்கான சம்பளம் வழங்க ரூ.8 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்தை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் 35 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்துக்கான சம்பளம், ஓய்வூதியம், ஆகஸ்டு மாதத்துக்கான சம்பளம் வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது.

கூடுதல் பொறுப்பு

மேலும் புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதியில் உள்ள 9 அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளின் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஏனாம் பிராந்தியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் 41 பேர் இடமாறுதல் பெற தகுதிபெற்றுள்ளனர். அவர்கள் பற்றிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு பள்ளிகளில் பணி புரிய விருப்பம் உள்ள ஆசிரியர்களும் தங்களது பிரெஞ்சு கல்வித்தகுதி குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதற்கான உத்தரவை கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com