'ராமாயணம்': 3 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பு - ரன்பீர் கபூரின் தோற்றம் வைரல்
'ராமாயணம்' படத்திற்காக நடிகர் ரன்பீர் கபூர் மிகவும் கடினமாக பயிற்சி செய்து தனது உடலை மாற்றி வருகிறார்.;
image courtecy:instagaram@shivohamofficial
மும்பை,
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளனர்.
இப்படத்திற்காக நடிகர் ரன்பீர் கபூர் மிகவும் கடினமாக பயிற்சி செய்து தனது உடலை மாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது பயிற்சியாளர் தற்போது ரன்பீர் கபூரின் முந்தைய மற்றும் சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் பகிர்ந்த பதிவில், "இது அனைத்தும் 3 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பு. குறுக்குவழிகளின் மூலம் வாழ்க்கையில் எதையும் அடைய முடியாது. அந்த இலக்கை அடைய சரியான திட்டமிடல் தேவை. இது ஒரு அழகான பயணமாக இருக்கும், உங்களின் அடுத்த வெற்றிப்படத்திற்கு வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.