6 அடி நீள கருநாகம் பிடிபட்டது

A 6 feet long black snake was caught;

Update:2022-11-16 00:15 IST

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா மேலந்தபெட்டு அருகே கடம்பு கிராமத்தை சேர்ந்தவர் சசிராஜ் ஷெட்டி. தொழில் அதிபர். இவரது வீட்டின் பின்புறம் கருநாக பாம்பு ஒன்று கிடந்தது. அந்த பாம்பு உடும்பு ஒன்றை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக பாம்புபிடி வீரர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அசோக் குமார், அங்கு விரைந்து வந்து கருநாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த பாம்பை பிடிக்கும்போது 2 முறை அது அசோக்குமாரை தாக்க முயன்றது. ஆனாலும் அசோக்குமார் பதற்றம் அடையாமல் கருநாக பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தார். பின்னர் அந்த கருநாக பாம்பை அசோக்குமார் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்